இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​பாசக்கார மகளை படிக்கவைக்க தொழிலதிபர் செய்த பிரம்மாண்டமான செயல்!

September 12, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
23062 Views

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், லண்டனில் உள்ள கல்லூரியில் படிக்கவிருக்கும் தனது மகளை கவனித்துக்கொள்வதற்காக 12 வேலையாட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு வேலையாட்களை தேடிக்கொடுக்கும் Silver Swan Recruitment என்ற நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு 12 வேலையாட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் விளம்பரதாரரான இந்திய தொழிலதிபரின் மகள் ஸ்காட்லாந்தில் உள்ள St Andrews பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை மேற்கொள்ளப்போவதாகவும், அவரை பார்த்துக்கொள்ளவும் அவருக்கு பணிவிடை செய்யவும் பணிப்பெண், தோட்டக்காரர், சமையல்காரர், வீட்டு வேலை புரிபவர்கள் உள்ளிட்ட 12 பேர் வேலைக்கு தேவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலையாட்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் திறமைசாளிகளாகவும் இருக்கவேண்டும் எனவும், அவர்கள் அந்த பெண்ணிற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருக்கவேண்டும் எனவும் அந்த பெண் பயணிக்கும் காரின் கதவை திறந்துவிடுவதற்கும் உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு, அந்த பணியாட்களுக்கு 28 லட்சம் ரூபாய் வருட சம்பளமாக தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற வித்தியாசமான விளம்பரத்தை பார்த்து, கல்லூரி முதல்வரிடம் கேட்ட பொழுது, கல்லூரியில் தங்கிப் படிப்பதும் வெளியில் தங்கிப் படிப்பதும் மாணவர்களின் விருப்பம் எனவும் இது அவர்களது குடும்பம் சார்ந்தது எனவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய தொழிலதிபர் ஒருவர் தன் மகளை வெளிநாட்டில் படிக்க வைப்பதற்காக 12 வேலையாட்களை தேடுவது சற்று வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், வேலையாட்கள் கிடைத்துவிட்டதால் அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டுவிட்டது எனவும் விளம்பரம் கொடுத்த இந்திய தொழிலதிபரின் பெயரை வெளியிட முடியாது எனவும் Silver Swan Recruitment நிறுவனம் தெரிவித்துவிட்டது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )