இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

​கர்ப்பிணிப் பெண் உஷாவின் மரணத்திற்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் சிறையிலடைப்பு!

March 8, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3496 Views

கர்ப்பிணிப் பெண் உஷாவின் மரணத்திற்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்கிறார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தி வந்தனர். 

அப்போது, இரு சக்கர வாகனத்தில், அந்த வழியாக வந்த ராஜா - உஷா தம்பதியினர், காவல்துறையினரைக் கவனிக்காமல் கடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பணியிலிருந்த ஆயுதப்படை காவல் ஆய்வாளர் காமராஜ், வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்று, அந்த தம்பதியினர் சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். 

இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். பொது மக்கள் திரண்டு காயமடைந்த இருவரையும்  மீட்டு திருவெறும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி 3 மாத கர்ப்பிணியான உஷா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, சம்பவ இடத்தில் கூடிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், காவல் ஆய்வாளர் காமராஜை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். காமராஜ் தப்பியோடிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கல்வீச்சில் ஈடுபட்டனர்.  இதில், 50க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. இச்சம்பவங்களால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. 

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்த உஷாவின் உடற்கூறு ஆய்வு, மருத்துவர் சரவணன் தலைமையில் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. உடற்கூறு முடிந்த நிலையில் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே உயிர் இழப்பை ஏற்படுத்திய துவாக்குடி காவல் ஆய்வாளர் மீது (திட்டமிட்டு கொலை) 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும் என உஷாவின் கணவர் ராஜா வலியுறுத்தியுள்ளார். 

கர்ப்பிணி உஷா உயிரிழந்ததையடுத்து அவரது சொந்த கிராமமான சூலமங்கலம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உஷாவிற்க்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நேரக் கூடாது என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உஷாவின் கணவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் மீது (திட்டமிட்டு கொலை) 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறை சம்மதம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், எஸ்.ஐ காமராஜ் மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பின்னரே உஷாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என அவரின் உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

144 தடை உத்தரவு மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என பாரதிய

நடராஜன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்

போயஸ் கார்டன் இல்லத்தில் குளியலறையில் ஜெயலலிதா மயங்கி

நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல்

ஆந்திர அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது

தற்போதைய செய்திகள் Mar 21
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)