இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

October 8, 2017 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3629 Views

கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் காரணமாக, சுற்றுலா தலங்களை காண முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக மழை நீடிக்கிறது. மேலும், அங்கு கடுமையான பனி மூட்டமும் காணப்படுகிறது. 

இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள வாகன ஓட்டிகள், பகல் நேரத்திலேயே வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். 

முக்கிய சுற்றுலா தலங்களான பைன் மரக்காடு, மோயர் பாய்ண்ட், குணா குகை, பில்லர் ராக், நட்சத்திர ஏரி போன்ற பகுதிகளில் பனி மூட்டம் கடுமையாக இருப்பதால், இயற்கை எழில் காட்சிகளை முழுமையாக காண முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 
 
இதே போல கொடைக்கானலில் பெய்த தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 37வது நாளாக தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )