​திருமூர்த்தி அணையிலிருந்து திருடப்படும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் - திருட்டுக்கு அதிகாரிகள் உடந்தையா? | farmers demand to stop water theft from thirumoorthy dam | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Jallikattu Game

​திருமூர்த்தி அணையிலிருந்து திருடப்படும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் - திருட்டுக்கு அதிகாரிகள் உடந்தையா?

June 7, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8765 Views

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து சட்டவிரோதமாக ராட்சத குழாய் அமைத்துள்ள தனிநபர்கள், பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

திருமூர்த்தி அணையையொட்டி பகுதியில் தனிநபர்கள் சிலர், 250 ஏக்கர்  நிலம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் விவசாயம் செய்வதற்காக பிரமாண்ட அளவில் தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டிய அவர்கள், திருமூர்த்தி அணையிலிருந்து சட்டவிரோதமாக நீரை உறிஞ்சி சேமித்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால் சந்தேகமடைந்த விவசாயிகள், தண்ணீர் திருடப்படுவது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தாமாக முன்வந்து அணையை சுற்றியுள்ள பகுதிகளில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். 

அப்போது, தடுப்பு அணைக்கு நீர் கொண்டுசெல்ல. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள், 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பள்ளம் தோண்டியிருப்பதும், அதில், ராட்சத குழாய்களை பதித்து அணையிலிருந்து தண்ணீர் திருடப்படுவதும் வெளிச்சத்திற்கு வந்தது. 

60 அடி உயர கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையை நம்பி மூன்று லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் உள்ள நிலையில், சட்டவிரோதமாக  தண்ணீரை உறிஞ்சும் தனிநபர்கள் மீது மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அத்துடன் தனிநபர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )