இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​ஆர்.கே.நகரில் முதல்வர் பழனிசாமி - ஓ.பி.எஸ் கூட்டாக பிரச்சாரம் துவக்கம்!

December 7, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2531 Views

சென்னை ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரசாரத்தை, தொடங்கினர். 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிமனை, சென்னை காசிமேட்டில் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ரிப்பன் வெட்டி, பணிமனையை திறந்துவைத்தனர். 

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர், இதில் கலந்துகொண்டனர்.  

தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் முறை, அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரத்தை, தொடங்கினர். திறந்த வேனில் இருந்தபடியே மதுசூதனனுக்கு ஆதரவாக வீதி வீதியாக அவர்கள் வாக்கு சேகரித்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து

சென்னையில் பேஸ் புக் மூலம் சிறுமியிடம் பழகி, அவர்களை

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநருக்கு

சென்னை திருவல்லிக்கேணியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில்

திருச்சி  ஸ்ரீங்கத்தில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள்

தற்போதைய செய்திகள் Jun 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.80 /Ltr (₹ -0.09 )
  • டீசல்
    ₹ 71.36 /Ltr (₹ -0.08 )