இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

​பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன்!

October 5, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8722 Views

காஞ்சிபுரம் மாவட்டம் சோகன்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர், ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிட்டில் ஜாக்கி மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், 3 மாதங்களுக்கு முன்னதாக பள்ளியிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவர், அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியை பூங்கொடியை, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் ஆசிரியை பூங்கொடி படுகாயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, தப்பிச்செல்ல முயன்ற மாணவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

ஆசிரியையை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால்


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்

தற்போதைய செய்திகள் Nov 18
மேலும் படிக்க...