இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

​சாலையில் குறுக்கே சென்ற பாம்பை காப்பாற்ற முயன்ற போது கோர விபத்து..!

October 5, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
48549 Views

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே சாலையில் குறுக்கே சென்ற பாம்பை காப்பாற்ற லாரியை நிறுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் இருந்து மக்காசோளம் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அதனை பின்தொடர்ந்து, சேலத்திற்கு இரும்பு தகடுகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. 

தாசசமுத்திரம் பகுதியில் சென்றபோது, மக்காச்சோள லாரியின் முன்னால், சாலையை கடந்து சென்ற சாரைப் பாம்பை பார்த்த ஓட்டுனர் தனகுமார், லாரியை திடீரென்று நிறுத்தியுள்ளார். 

அதனால், பின்னால் இரும்பு தகடுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் தங்கதுரையும், லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது இரும்பு தகடுகள் லாரி ஓட்டுனர் கேபினை உடைத்துக்கொண்டு முன்புறம் பாய்ந்ததில் லாரி ஓட்டுனர் தனகுமார் மற்றும் கிளீனர் ரமேஷ் ஆகியோரின் உடல்கள் துண்டாகின. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாம்பும் உயிரிழந்தது

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )