இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

அண்ணா பல்கலை. தேர்வில் 5 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்!

August 4, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2520 Views

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில், பேராசிரியை உமா, திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் விஜயகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த தேர்வில், ஐந்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர் இரண்டுமுறை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு முறைப்படி விண்ணப்பித்து, விதிகளை மீறி 77 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்முறை மறுமதிப்பீட்டில் 40 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்ற குறிப்பிட்ட மாணவர், இரண்டாவது மறுமதிப்பீட்டின்போது மேலும் 32 மதிப்பெண்களை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று பத்தாயிரம் மாணவர்கள் வரை பயன்பெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். 

மறுமதிப்பீட்டின் போது மாணவர்கள் உண்மையில் பெற்ற மதிப்பெண்களைவிட 15 மதிப்பெண்களே கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், நன்கு திட்டமிடப்பட்டு அப்பட்டமான விதிமீறல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கருதுகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )