இன்றைய வானிலை

  • 33 °C / 91 °F

Popup

Breaking News

Jallikattu Game

​உதகை, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

March 30, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1607 Views

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் வருகையால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. 

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் இதமான காலச்சூழலை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வந்துசெல்வர். 

இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வரத் தொடங்கி உள்ளனர். உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

கொடைக்கானல்:

இதுபோல் கொடைக்கானலிலும், தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அங்கு பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், தூண் பாறை, பிரயண்ட் பூங்கா, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கர்நாடகாவில் குமாரசாமி அரசு பதவியேற்பது ஜனநாயகத்துக்கு

காவிரி விவகாரம் பற்றி ஆலோசிக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

பெருந்துறை அருகே லாரியின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில்

சென்னை நேப்பியர் பாலம் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு

திருப்பூரில் முதல் முறையாக நடைபெறும் ஹெலிகாப்டர் திருவிழாவில்,

தற்போதைய செய்திகள் May 20

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)