இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Breaking News

Jallikattu Game

​சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தொடக்கம்!

March 30, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1334 Views

பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியை சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் சென்னை ரைபிள் கிளப் இயங்கி வருகிறது. 

அங்கு மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி காவல்துறை ஆணையர் விஸ்வநாதனால் தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்கள் தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். 10 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தற்போது 40 மாணவர்கள் பயிற்சியில் இணைந்திருப்பதாக தெரிவித்த மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சர்வதேச தரத்தில் நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கவிருப்பதாகக் கூறினார். 

ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சியில் சேரலாம் எனக் கூறிய ஆணையர் விஸ்வநாதன், மொத்தம் 200 மாணவர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு தொடர்பாக மதுரை காமராசர்

தமிழகத்திலேயே மிகப்பெரிய கம்பம் நடும் விழா, சத்தியமங்கலத்தில்

புதுச்சேரி அருகே திருபுவனையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட

ஓடும் ரயிலில் பயணித்த 9 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில்

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

தற்போதைய செய்திகள் Apr 23
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)