இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய் - மதுரை அருகே ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!

July 3, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6939 Views

உசிலம்பட்டி அருகே மழையால் அறுந்து கிடந்த மின் வயர்மூலம் மின்சாரம் தாக்கி முதியவர், மாடு, நாய் என மூன்று உயிர் பலியான சோகம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின்வயரை பார்க்காமல் இன்று காலை கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவர் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அறுந்து கிடந்த மின்வயரை மாடு மிதித்ததாக் மின்சாரம் பாய்ந்து, துடித்த நிலையில் மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் மீதும் மின்சாரம் தாக்கியது. 

இதனையறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் அவர்களை காப்பாற்ற முயல்வதாக மின்வயரை கடித்து இழுத்த நிலையில் நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர். 

சம்பவமறிந்து விரைந்து வந்த உறவினர்கள் போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் நேரில் விசாரனை நடத்தி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார். 

மேலும் தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்கு போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் கிராம மக்களிடையே பொரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )