இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

​தஞ்சையில் எல்.ஐ.சி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்!

April 3, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1759 Views

தஞ்சையில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி முற்றுகை போராட்டத்தில் எல்.ஐ.சி அலுவலகம் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.அப்போது காவல்துறையினர் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜிசாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலத்தை திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைசிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அப்போது போராட்டகாரர்கள் திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீசி எல்.ஐ.சி அலுவலகம் மீது சரமாரியாக தாக்கினர். 

அப்போது காவலர் ஒருவர் திமுக பிரமுகரை தாக்கியதாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நிலவியது. 

அதிமுகவின் உண்ணாவிரதம் அருகில் நடப்பதால் திமுகவின் போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தடியடி நடத்தயதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )