இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​போக்குவரத்து போலீசாரின் சட்டை காலரில் கண்காணிப்பு கேமரா!

February 3, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2019 Views

போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் நடத்தும் விசாரணைகள் குறித்து அறிய பாடி ஒன் நவீன கேமரா சென்னையில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சமீபத்தில் சென்னை தரமணியில் போக்குவரத்து போலீஸார் தாக்கியதாக மணிகண்டன் என்ற கார் ஓட்டுநர் நடுநோட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போக்குவரத்து போலீசார் மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, போலீஸாரின் செயல்பாடுகளை கண்காணிக்க மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் போக்குவரத்து போலீஸாருக்கு பாடி ஒன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையிலும் பரிசோதனை முயற்சியாக கோயம்பேடு, சென்ட்ரல், தேனாம்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதி போலீஸாருக்கு பாடி ஒன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

போலீஸாரின் சட்டை காலரில் பொருத்தப்படும் இந்த கேமராக்கள் மூலமாக, அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம்.

பாடி ஒன் கேமரா மூலம் போக்குவரத்து காவலர்களின் விசாரணை பேச்சுகள், அபராத விவரங்கள் கேமராவில் பதிவாகும். விசாரணையின்போது, தவறுக்கு இடமளிக்காத வகையில், போலீஸாரின் செயல்பாடுகளை அதிகாரிகள் அறியவும் முடியும். 

இக்கேமராவில் 32 ஜிபி மெமரி கார்டு பொருத்தலாம். கேமராவிலுள்ள தகவல்களை சிஸ்டத்தில் பதிவிறக்கம் (டவுன் லோடு) செய்த பின்னரே தகவல்களை அழிக்க முடியும். 

கேமராவின் விலை ரூ.1 லட்சம். டிஸ்பிளே வசதி உள்ளது. பதிவு செய்யும்போது கேமரா செயல்பாடுகளை பார்த்துக் கொள்ளலாம். போட்டோவும் எடுக்கலாம். 

கேரளாவிலும் சமீபத்தில் இதே முறையில் போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )