இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

​மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கடைகளை அகற்றக்கோரி போராட்டம்!

February 3, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1196 Views

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் நேரிட்ட தீ விபத்திற்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி இந்து அமைப்பினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கிழக்கு ராஜ கோபுரம் அம்மன் சன்னதி நுழைவுவாயில் பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்றிரவு மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. 

காற்றின் வேகம் காரணமாக தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 35 கடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இந்த நிலையில் தீ விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் தவறி விட்டதாக பக்தர்களும், பொதுமக்களும் புகார் எழுந்தது. 

இதற்கிடையே மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கடைகளை அகற்றக்கோரி இந்து அமைப்பினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவில் நிர்வாகத்தை ஆதின மடாதிபதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )