இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Popup

Breaking News

Jallikattu Game

​"மத்திய அரசின் காப்பீடு திட்டத்தால் அனைத்து ஏழைகளுக்கும் மருத்துவ வசதி"

February 3, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
859 Views

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தால், ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இனியும் இருக்காது, என அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். 

2018-19 ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் 10 கோடி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர் பயன்பெரும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அறிமுகமாக இருக்கும் இத்திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு  ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வசதியை பெற முடியும்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் நடைபெற்ற நுரையீரல் பாதிப்புகள் தொடர்பான கருத்தரங்கில், கலந்துகொண்டு பேசிய பிரதாப் ரெட்டி, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தால், ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இனியும் இருக்காது, என தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதாப் ரெட்டி, இந்தியாவிலேயே சென்னையில் தான், அதிக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும், தொற்றா நோய்களின் சுமை அதிகரித்துள்ளதாகவும் ரெட்டி தெரிவித்தார்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், காவிரி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மானிய விலையில் மகளிருக்கு

சென்னை திருவொற்றியூர் மீனவர்கள் மீது கடலோர காவல் படையினர் தாக்குதல்

வேலூர் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்

வடமாநிலங்களில் திருக்குறளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக

தற்போதைய செய்திகள் Feb 24
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.16 (லி)
  • டீசல்
    ₹ 65.51 (லி)