​பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு திரும்ப முதியவர்கள் மறுப்பு - தமிழக அரசு பதில் மனு! | old aged not interested to go back to paleshwaram home:TN govt | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Jallikattu Game

​பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு திரும்ப முதியவர்கள் மறுப்பு - தமிழக அரசு பதில் மனு!

March 28, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1481 Views

பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு திரும்ப முதியவர்கள் விரும்பவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால், அங்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தங்க வைக்கப்பட்டு இருந்த முதியோர்களை மீட்டு, பல்வேறு அரசு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கு எதிராக பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாகி தாமஸ், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர், அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை, கருணை இல்லத்துக்கு உடனடியாக திருப்பி அனுப்பி வைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு இல்லங்களில் முதியவர்கள் பாலேஸ்வரம் இல்லத்திற்கு திரும்ப விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

அரசு காப்பகங்களில் இருந்து முதியவர்கள் உண்மையிலேயே பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு செல்ல மறுக்கிறார்களா என்பதை அறிய, வழக்கறிஞர் குழு ஒன்றை அமைக்கவும், அதில் அரசு மற்றும் கருணை இல்ல தரப்பினரும் இடம்பெறலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், முதியவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், விசாரணையின்போது மன நல மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )