​14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்! | kumbhabishekam to be carried out in nellaiyappar temple after 14 years | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Jallikattu Game

​14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம்!

April 25, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2865 Views

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பல கோடி ரூபாய் மதிப்பில் நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையும், 21 ஆம் தேதி மஹா கணபதி ஹோமமும் நடைபெற்றன. 

யாகசாலை பூஜைக்காக நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கம் முன்புள்ள பகுதியில் யாகசாலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 

87 யாக குண்டங்கள், 49 வகையான வேதிகைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை நடைபெற்ற கடம் யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, பஞ்ச வாத்தியங்கள் முழங்க துவங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, பல்வேறு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )