இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனின் பிறந்த நாள் இன்று!

April 24, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3327 Views

இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனின் பிறந்த நாளான இன்று அவரது எழுத்துலக பயணம் குறித்த சிறப்புத் தொகுப்பு ஒன்றை காணலாம்.

தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் முக்கியமானவர். எழுத்தாளராக மட்டும் இல்லாமல், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். 

பிறப்பு:

முருகேசன் என்ற இயற்பெயர் கொண்ட ஜெயகாந்தன் 1934ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கடலூரில் பிறந்தார். 

படிப்பு:

தண்டபாணி பிள்ளை - மகாலெட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த ஜெயகாந்தன், சிறுவயது முதலே பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாதவராக இருந்ததால் 
5ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். 

இலக்கிய நாட்டம்:

தனது 12ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரத்தில் உள்ள தனது மாமா வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அங்கு புலவர் க.சொக்கலிங்கத்திடம் தமிழ், இலக்கிய, இலக்கணங்களை முறையாக கற்றார். 
முதல் சிறுகதை:

ஜெயகாந்தனின் முதல் சிறுகதை 1950ஆம் ஆண்டு ”சௌபாக்கியம்” என்ற இதழில் வெளியானது. ”அக்னி பிரவேசம்”, ”குருபீடம்”, “நான் இருக்கிறேன்”, “தவறுகள் குற்றங்கள் அல்ல”,”ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்”,” ஒரு பிடிச்சோறு” ஆகிய கதைகள் தனித்துவம் வாய்ந்தவை. 

நாவல்கள்:

ஜெயகாந்தனின் 17 நாவல்கள், 30க்கும் மேற்பட்ட குறுநாவல்களில் ”ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்”, ”சில நேரங்களில் சில மனிதர்கள்”, ”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, ”பாரிஸுக்கு போ” போன்றவை காலத்தை கடந்தும் நிலைத்திருப்பவை. 

சினிமா:

தனது தனித்துவமான பாத்திரப் படைப்புகள், முற்போக்கான கதை களத்திற்கு பெயர் பெற்ற ஜெயகாந்தனின் ”சில நேரங்களில் சில மனிதர்கள்”, ”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, ”ஊருக்கு நூறு பேர்” ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. ”உன்னை போல் ஒருவன்” மற்றும் ”யாருக்காக அழுதான்” ஆகிய இரு கதைகளையும் அவரே திரைப்படமாக இயக்கினார். 

”உன்னை போல் ஒருவன் ” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது மற்றும் மாநில அரசின் விருதைப் பெற்றது. 

விருதுகள்:

ஜெயகாந்தனுக்கு 1972ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதும், 2002ல் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞான பீட விருதும் வழங்கப்பட்டன. இதேபோல் 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. 

ஜெயகாந்தனின் எழுத்துக்கள் வரவேற்பை மட்டுமல்லாது, விமர்சனங்களையும் அதிகளவில் பெற்றன. ”ரிஷிமூலம்”, ”அக்னிப் பிரவேசம்” ஆகியவை அன்றைய சூழலில் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகின. ஜெயகாந்தனின் கதைகளில் பிரச்சாரத்தன்மை அதிகளவில் இருப்பதாகவும், இலக்கியத்திற்கான சாரம் குறைந்தளவே உள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை எதையும் பெரிதாய் பொருட்படுத்தாமல், பெண் சுதந்திரம், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை, சமூக அக்கறை சார்ந்த கதைகளை ஜெயகாந்தன் தொடர்ந்து எழுதி வந்தார்.

மறைவு:

நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெயகாந்தன் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் காலமானார்.  தனது கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்துமே தான்தான் என ஜெயகாந்தனே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அவரின் படைப்புகள் மூலமாகவும், அவர் படைத்த கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் அவர் தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவே நாமும் கருதுவோம்.. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )