இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​செவிலியர் பட்டப் படிப்பினை பயிலும் முதல் நாடோடி சமுதாய மாணவி!

February 22, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1147 Views

புதுச்சேரியில் நாடோடி சமுதாயத்தைச் சேர்ந்த கவுசல்யா என்பவர் செவிலியர் பட்டப் படிப்பை படித்து வருகிறார். இதன் மூலம் செவிலியர் பட்டப் படிப்பினை பயிலும் முதல் நரிக்குறவ இன கல்லூரி மாணவியாக அவர் திகழ்கிறார். அவரைப்பற்றிய செய்தி தொகுப்பினை தற்போது காணலாம்.   

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் கவுசல்யா. சிறுவயதில் இவரது சமூகத்தில் மற்ற பிள்ளைகளைப்போலவே, பெற்றோருடன் சென்று பாசிமணி விற்றுள்ளார். 

ஜாலிஹோம் என்ற அமைப்பால் மீட்கப்பட்ட கௌசல்யா தனது வயது அடிப்படையில் 7ம் வகுப்பில் நேரடியாக சேர்க்கப்பட்டபோது படிப்பு என்றால் என்னவென்றே தெரியாமலும், அங்கு நடத்தும் பாடங்களும், புரியாமல் சிரமப்பட்டுள்ளார். 
பின்னர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 344 மதிப்பெண் பெற்ற கவுசல்யா, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு செவிலியர் படித்து வருகிறார். 

கவுசல்யா மட்டுமின்றி, இதே போன்று பலரை மீட்டுள்ள ஜாலிஹோம் தன்னார்வ அமைப்பு, அவர்களைப் பாதுகாத்து கல்வி பயிற்றுவித்து வருகிறது. 

தனக்குக் கிடைத்த கல்வியை, தனக்கு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே மற்ற நரிக்குறவர் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என நாள்தோறும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் கூறி அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றார். 

உயர்படிப்பு முடித்து மற்றவர்களைப்போல் தன்னுடைய சமூகத்தை சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி கற்றுத்தர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள கவுசல்யா, தங்கள் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார். Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து

சென்னையில் பேஸ் புக் மூலம் சிறுமியிடம் பழகி, அவர்களை

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநருக்கு

சென்னை திருவல்லிக்கேணியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில்

திருச்சி  ஸ்ரீங்கத்தில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள்

தற்போதைய செய்திகள் Jun 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.80 /Ltr (₹ -0.09 )
  • டீசல்
    ₹ 71.36 /Ltr (₹ -0.08 )