இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை!

August 20, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8031 Views

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு, கல்லூரி தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கல்லூரி கல்வி இயக்குநர் சுமதி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இந்த மாத தொடக்கத்தில் இந்த நோட்டீஸை அனுப்பினார். 

இருபாலர் படிக்கும் கல்லூரிகளில், மாணவிகளை மாணவர்கள் படம் எடுக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்கும், தேர்வின் பொழுது செல்போன்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கும் இதுபோன்ற நோட்டீஸை கல்லூரி தலைவர்களுக்கு அனுப்பியதாக உயர்கல்வி செயலாளர் தெரிவித்தார்.

இந்த தடையை அமல்படுத்தவேண்டிய காலம் இன்னும் குறிப்பிடவில்லை என்றாலும், கல்லூரி தலைவர்களுக்கு தகவல் கிடைத்தவுடன் இந்த விதிக்கு இணங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு இந்த தகவல் கிடைத்துவிட்டது. ஆனால், மதுரையில் உள்ள சில கல்லூரிகளுக்கு இன்னும் இந்த தகவல் வரவில்லை என மதுரையில் உள்ள கல்லூரி தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 2005ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்திலும் கல்லூரிக்குள் செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு வகுப்பறைக்குள் மட்டும் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என அந்த தடையை தளர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )