இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

​காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்னை எரித்துக்கொலை செய்த இளைஞர்!

November 14, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3191 Views

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற இளைஞர், பெண்ணின் குடும்பத்தினரையும் தீ வைத்து கொளுத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் இந்துஜா. இவரை ஆகாஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி இந்துஜாவை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் ஆகாஷின் காதலை இந்துஜா ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்றிரவு பெட்ரோலுடன் இந்துஜா இல்லத்திற்கு சென்று அங்கிருந்த இந்துஜா மற்றும் அவரது தாய், தங்கை நிவேதா மற்றும் தம்பி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி பற்றவைத்துள்ளார். 
அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி இந்துஜா உயிரிழந்தார். 

அவரது தாய், தங்கை மற்றும் தம்பி ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார் தப்பியோடிய கொலையாளி ஆகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொலையாளி ஆகாஷ் நேற்றிரவு பெட்ரோல் கேனுடன் இந்துஜாவின் வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால்


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்

தற்போதைய செய்திகள் Nov 18
மேலும் படிக்க...