இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி 5 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு!

June 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2544 Views

கேரள மாநிலம் அட்டப்பாடியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நாட்களாக தவித்துவந்த தம்பதியை நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

தமிழக - கேரள எல்லையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள சாவடியூர் கிராமத்தின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆற்றைக் கடந்து விவசாயப் பணிக்குச் சென்ற சுகுணன், வல்சம்மா என்ற வயதில் முதிய தம்பதி வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாமல் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தின் நடுவே கனமழையில் சிக்கித் தவித்த அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். 

கடும் போராட்டத்திற்கு பின் முதிய தம்பதி 5 நாட்களுக்குப் பின்னர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டு அட்டப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )