இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

மலர் கண்காட்சியைக் காண ஏற்காடு, உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

May 13, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2949 Views

கோடை சீசனையொட்டி, ஏற்காடு மற்றும் உதகையில் மலர், ரோஜா கண்காட்சி துவங்கியுள்ளது. வண்ண, வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பல வடிவங்கள், காண்போர் மனதை கொள்ளை கொள்கின்றன. 

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை கழிக்கவும், மலைப்பிரசேதங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில், ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற தமிழக கோடை வாசஸ்தலங்களில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. 

இதனை அடுத்து, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, ஏற்காட்டில், 43-வது மலர் கண்காட்சி நேற்று ஆரம்பமானது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த கோடை விழாவை பசுமை விழாவாக கொண்டாடும் நோக்கில், ஒரு லட்சம் மரக்கன்றுகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பூக்களால் ஆன விமானம், ரோஜா மலர்களால் ஆன டிராக்டர், குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் வடிவங்கள், 20 ஆயிரம் கார்னேசன் ரோஜா மலர்களால் ஆன தலைமைச் செயலகம், அரிய வகை பழங்களால் ஆன மிருக உருவங்கள் போன்றவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

மற்றொரு கோடை வாசஸ்தலமான உதகையிலும், அரசு ரோஜா பூங்காவில், 16வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. 25 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட இந்தியா கேட், சோட்டா பீம், ஜல்லிக்கட்டு காளை, மயில், படகு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 100 வகையான ரோஜா மலர்கள் காண்போர் மனதை கொள்ளை கொள்கின்றன.

பிரசித்திப்பெற்ற ஊட்டி குதிரை பந்தயமும் 132ஆவது ஆண்டாக நடத்தப்படுகிறது. பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள், உதகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  

இலக்கை நோக்கி சீறிப் பாயும் குதிரைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால்,  ஏற்காடு, உதகை மலை பிரதேசங்கள் களை கட்டியுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )