இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Breaking News

Jallikattu Game

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்!

March 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1817 Views

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 15 பேர் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனையில் தீவிர தீக்காய தனிப்பிரிவில்   அனுமதிக்கப்பட்டனர். 

தற்போது சென்னையை சேர்ந்த அனுவித்யா, நிஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த சாய்வசுமதி, ஈரோட்டைச் சேர்ந்த கண்ணன், திவ்யா, சதிஷ் சேலத்தை சேர்ந்த தேவி, ஆகிய 7 பேர் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த மீனா, மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து, மதுரை கே.கே.நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். 

மதுரை கெனட் மருத்துவனையில் திருப்பூரை சேர்ந்த சக்திகலா, பொள்ளாச்சியைச் 
சேர்ந்த திவ்யா விசுவநாதன், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரை அப்போலோ மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த மீனாவுடன் சென்னையை சேர்ந்த திவ்யா, நிக்கோலின் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், சென்னையை சேர்ந்த சுவேதா, பார்க்கவி ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,  மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.  

சிகிச்சை பெறுபவர்களில் நிஷா, திவ்யா, அனுவித்யா, தேவி ஆகியோர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு தொடர்பாக மதுரை காமராசர்

தமிழகத்திலேயே மிகப்பெரிய கம்பம் நடும் விழா, சத்தியமங்கலத்தில்

புதுச்சேரி அருகே திருபுவனையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட

ஓடும் ரயிலில் பயணித்த 9 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில்

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

தற்போதைய செய்திகள் Apr 23
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)