இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

இரவு நேரங்களில் ஊருக்குள் உலா வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

February 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1407 Views

உதகை அருகே இரவு நேரத்தில் கரடி ஊருக்குள் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் சாலையில் உள்ளது மசினகுடி கிராமம். இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியிலிருந்து கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்கு நுழைந்தது. 

முட்புதரில் பதுங்கிக் கொள்ளும் கரடி, இரவு நேரங்களில் மசினகுடியில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

ஊருக்குள் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியினுள் விட மசினகுடி மக்கள் உதகை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு நேரில் மனு அளித்தனர். 

இதனையடுத்து கரடியை பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் வனத்துறையினர் அதனை பிடிக்காமல் அலட்சியமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரவு நேரத்தில் அந்தக் கரடி மசினகுடி பேருந்து நிலையம் அருகே சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.


 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

144 தடை உத்தரவு மத ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என பாரதிய

நடராஜன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள்

போயஸ் கார்டன் இல்லத்தில் குளியலறையில் ஜெயலலிதா மயங்கி

நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல்

ஆந்திர அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காதது

தற்போதைய செய்திகள் Mar 21
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)