இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​போலி PAYTM செயலி மூலம் நூதன மோசடி!

September 12, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7056 Views

சென்னை அருகே போலி PAYTM செயலி மூலம் மூன்று லட்சம் வரை மோசடி செய்ததாக கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குமரன் குடிலைச் சேர்ந்த சரவணன், பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறார். அதே பகுதியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்களான டேனியல், கிசாந்த் ஆகியோர் PAYTM செயலி மூலம் கடந்த மூன்று மாதங்களாக பணம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

வங்கியில் பணம் வரவு வைக்கப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், மாணவர்களின் செல்போனை பரிசோதித்ததில் அவர்கள் SPOOF PAYTM என்ற செயலியை பயன்படுத்தி பணம் செலுத்தியது தெரியவந்தது.

புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸார், மாணவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )