இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​ஐஜி. பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6625 Views

புதுக்கோட்டையில் ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்பாள் சிலை மாயமானதாகக் கூறி தொடரபட்ட மனு குறித்து பதிலளிக்க ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருச்சியைச் சேர்ந்த ஆனந்த் மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், புதுக்கோட்டை திருக்கோகரணம் பகுதியில் உள்ள ஹகோகரணேஸ்வரர் - பிரகதாம்பாள் கோயிலில், ராஜேந்திரசோழன்,  பச்சை மரகத அம்மாள் சிலையை நிறுவியதாவும், அது மாயமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இதுக்குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, இதுதொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிலைக் கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.  

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )