இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

​நடிகர் சிம்புவின் கருத்துக்கு கர்நாடகாவில் பெருகும் ஆதரவு!

April 12, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9921 Views

நடிகர் சிம்புவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, கர்நாடக மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர். தண்ணீர் வழங்கும் கர்நாடக மக்களுக்கு நடிகர் சிம்புவும் நன்றியை தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து போட்டோக்களும், வீடியோக்களும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும், ஒற்றுமை ஏற்படும் என அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் கார்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து,நடிகர் சிம்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கார்நாடக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். 

இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்க தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளனர் என்பது இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளதாகவும் அந்த ஆடியோவில் சிம்பு தெரிவித்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )