இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

​ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி வரி குறைப்பு - தம்பிதுரை!

November 12, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2847 Views

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்படும் சோதனை குறித்து வருமான வரித்துறையினரிடம் தான் கேட்க வேண்டும், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என தெரிவித்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னர் விடுத்த கோரிக்கைகளை ஏற்றே ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு இருப்பதாக புரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 

இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி எனவும், அதிமுகவை யாரும் முடக்க முடியாது எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தலையை கொண்டு வந்தால்


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்

தற்போதைய செய்திகள் Nov 18
மேலும் படிக்க...