இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Breaking News

Jallikattu Game

​ஏற்காட்டில் சீசனுக்கு முன்பாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

April 10, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2612 Views

ஆண்டுதோறும் லட்சக்கணக்காணோர் வந்து செல்லும் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

தென்னிந்தியாவில் உதகை, கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு இணையானதாக ஏற்காடு மலைவாசஸ்தலம் திகழ்ந்து வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுறது. பிற சுற்றுலாதலங்களை விட ஏற்காட்டில் தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவு குறைவு என்பதால் இங்கு வர விரும்புவதாக தெரிவிக்கின்றனர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர்.

ஆனால் அப்படி வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தெந்த இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தவிக்கின்றனர். பல இடங்களில் வழிகாட்டிப் பலகைகள் மற்றும் பெயர் பலகைகள் கூட இல்லாத நிலையே உள்ளது. 

இது ஒருபுறமிருக்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடங்களான அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம் மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக, ஏற்காடு மீன் காட்சியகம் பராமரிப்பு இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்குள்ள டியூப்லைட்கள் கூட அந்தரத்தில் தொங்கியபடி எந்த நேரமும் தலையில் விழும் நிலையில் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்பொழுதே சுமார் 20 ஆயிரம் மலர் செடிகளை நடவு செய்யத் தொடங்கியுள்ளனர். 

ஆனால் அவற்றுடன் அடிப்படை வசதிகளுக்கான பணிகளையும் இப்பொழுதே தொடங்கினால் மட்டுமே கோடைக்காலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலாவை அனுபவித்து செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

விழுப்புரம் அருகே பெண்ணின் திருமணத்திற்காக வாங்கி வந்திருந்த

பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாகக் கூறிய நடிகர்

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.76 /Ltr (₹ -0.17 )
  • டீசல்
    ₹ 72.28 /Ltr (₹ -0.20 )