இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும் - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

April 10, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1394 Views

கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை அய்யப்பன் தாங்கல் பகுதியில் தொற்றில்லா நோய் தடுப்பு பிரச்சார வாகனத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து அந்த 
வாகனத்தை சிறிது தூரம் ஓட்டி சென்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி வரைவு திட்டத்தை மத்திய அரசு கொடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.  

காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க பிரதமருக்கு திமுக கருப்பு கொடி காட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கருப்பு கொடி காட்ட வேண்டியது திமுகவின்  தலைமையை எதிர்த்து தான் என அவர் கூறினார்.  

ஐபிஎல் போட்டி நடத்த வேண்டாம் என்று கூறுபவர்கள் திரைப்படம் திரையிடக் கூடாது என்றும் திரைப்படம் எடுக்க கூடாது என்றும் கூறுவார்களா என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )