இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்..!

March 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3069 Views

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தியடைய, சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

கடந்த மாதம் 24ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் குளியலறையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இதனை அடுத்து, அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள அவரது இல்லத்தில், 16ஆம் நாள் சடங்குகள் இன்று நடைபெற்றன. 

இதில், அவரின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோரும், நடிகர்கள் அஜித்குமார், விஜயகுமார், நடிகைகள் மீனா, ஷாலினி உள்ளிட்டோரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

குடும்ப நண்பர்களான சுப்ரதா ராய் சஹாரா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமர்சிங் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )