இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​கேரளாவிற்கு ரூ.10,000 நிதியுதவி அளித்த Paytm நிறுவனரை கிண்டலடிக்கும் இணையவாசிகள்!

August 20, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4228 Views

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கனமழையால் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது கேரள மாநிலம். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் மரணடைந்துள்ள நிலையில், சுமார் 10 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள், சாமானியர்கள் என்ற பேதம் இல்லாமல் தங்களால் ஆன பொருளுதவியும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி e-commerce தளமான Paytm நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் கேரள மாநில வெள்ளத்திற்கு 10,000 ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, இதே போன்று பிறரும் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
 

Paytm நிறுவனரின் இப்பதிவு இணையவாசிகளிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பெரும் கோடீஸ்வரரான ஒருவர் தாராளமாக நிதியுதவி அளிக்காமல் 10,000 ரூபாய் மட்டுமே அளித்துள்ளதை கண்டிக்கும் விதமாக பதிவிட்டுவருகின்றனர்.
  இதனிடையே Paytm நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், அந்நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் 4 லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பதிவைக்கண்ட பலரும், கேரள வெள்ளம் போன்ற பேரிடர் சந்தர்ப்பத்தை தனது தனிப்பட்ட தொழில் மேம்பாட்டிற்காக Paytm நிறுவனர் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பெரும் செல்வந்தராக விளங்கினாலும் தாராளமாக அளிக்காமல் விளம்பர நோக்கில் செயல்பட்டுள்ளதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )