விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரா! | Cops allegedly let EC bribery case accused roam freely 7 | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Breaking News

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரா!

October 20, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2923 Views

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, பெங்களூருவில் சுகேஷ் சந்திரா சுதந்திரமாக சுற்றித் திரிந்தது தொடர்பாக டெல்லி போலீசார் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

விசாரணைக் கைதியான இவரை, கோவையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 7 பேர் அடங்கிய டெல்லி போலீசார்,கடந்த 9ம் தேதி பெங்களூரூ அழைத்து வந்தனர். அப்போது, போலீசாரின் ஒத்துழைப்புடன் சுகேஷ் சந்திரா, பெங்களுருவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்ததாக வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், பெரிய வணிக வளாகங்களுக்குச் சென்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாகவும், தோழி லீனா மரியாபாலுடன் சுகேஷ் நேரத்தை செலவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமின்றி, 3 சொகுசு கார்களை சுகேஷ் வாங்கியதாகவும், அது தொடர்பாக கார் தரகர்களிடம் பேரம் நடத்தியதும் அம்பலமாகியுள்ளது. 

சுகேஷ் சந்திராவின் நடவடிக்கைகள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 11ம் தேதி வருமான வரித்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது பல்வேறு விலை உயர்ந்த பொருள்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சுகேஷ் சர்வ சுதந்திரமாக வந்து சென்றது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாகவும், 

அப்போது, ஒரு காவலர் கூட சுகேஷூடன் இல்லை என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து, சுகேஷ் சுதந்திரமாக சுற்றித் திரிய உதவியதாக கூறப்படும் டெல்லி போலீசார் 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஏசியான் அமைப்பை

தனியார் விமான நிறுவனமான ‘ஏர் டெக்கான்’ அறிமுக சலுகையாக

தற்போதைய செய்திகள் Dec 14
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)