இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​பாடகி சொர்ணலதாவின் நினைவு நாள் இன்று!

September 12, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14454 Views

தனது குரல் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சொர்ணலதாவின் நினைவு நாளான இன்று அவர் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் பாடகிகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. எஸ்.ஜானகி, பி.சுசிலா சித்ரா என நீளும் தமிழ் பாடகிகளின் வரிசையில் சொர்ணலதாவிற்கு தவிர்க்க முடியாத இடம் எப்போதும் உண்டு. 

1973ம் ஆண்டு கேரளாவின் பாலக்காடு பகுதியில் பிறந்தவர் சொர்ணலதா. கடந்த 1987ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாடல் மூலம் அறிமுகமானார் சொர்ணலதா.

பாடகியாக அறிமுகமான போது சொர்ணலதாவின் வயது 14. அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் குரலின் இனிமை தமிழ் ரசிகர்களின் செவிகளுக்கும் இதயத்திற்கும் விரைவாக சென்று சேர்ந்தது.

சின்னத்தம்பி படத்தில் இடபெற்ற போவோமா ஊர்கோலம் பாடலும், நீ எங்கே என் அன்பே பாடலும் ஒரே ராகத்தில் இரு வேறு சூழல்களில் வரும். அந்த இரண்டு பாடல்களிலும் சூழலுக்கேற்ற உணர்வை பிரதிபலித்திருப்பார் சொர்ணலதா.

அறிமுகமான சிறிது காலத்திற்குள்ளாகவே இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் பிடித்த பாடகியானார் சொர்ணலதா. பல விருதுகளும் சொர்ணலதாவை நோக்கி வரத் தொடங்கின.

சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற போவோமா ஊர்கோலம் பாடலுக்காக முதன் முறையாக தமிழக அரசின் விருதைப் பெற்றார் சொர்ணலதா. தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல பாடல்களை சொர்ணலதா பாடியிருக்கிறார். 

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அறிமுகமாகி இளையராஜா இசையில் பாடிப் புகழ்பெற்ற சொர்ணலதா ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுதாயி பாடலுக்காக ((21வது)) தேசிய விருது பெற்றார் சொர்ணலதா.

திரை உலகில் வெற்றிகரமாக வலம் வந்த சொர்ணலதாவின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை எனக் கூறப்படுகிறது. சொர்ணலதாவின் குரலில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடும். அப்படித்தான் அவரது சொந்த வாழ்க்கையும் அமைந்ததாக கூறுகிறார்கள் சினிமா விமர்சகர்கள். 

நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சொர்ணலதா கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று மரணமடைந்தார். சொர்ணலதா மறைந்தாலும் மன அமைதிக்காக மென்சோக பாடல் கேட்கும் ரசிகர்கள் அவரது பாடலை இசைக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது நிதர்சனம்.

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )