இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

ரஜினியுடன் நடிக்க வேண்டுமென்ற த்ரிஷாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!

August 20, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2083 Views

கார்த்திக் சுப்பராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் த்ரிஷா தான் கதாநாயகி என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. 

காலா, 2.0 படங்களையடுத்து ரஜினியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில்  கார்த்திக் சுப்பராஜ், ரஜினி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் சிம்ரன், மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். 

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்துள்ளது. படத்தில் காளி என்கிற பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கதாநாயகி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமலிருந்த நிலையில் இன்று படத் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் த்ரிஷா தான் படத்தின் நாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் த்ரிஷா ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி கதாயநாயகர்கள் அனைவருடனும் ஏற்கனவே த்ரிஷா நடித்துவிட்டார். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது மட்டுமே அவரது நீண்ட கால  ஆசையாக இருந்தது. 

இந்நிலையில் தற்போது அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

Categories: சினிமா
Image
Image தொடர்புடைய செய்திகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் முன்னோட்டம்,

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )