இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

ரயில் பயணிகளிடையே நூதன முறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதியர் கைது!

August 20, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2684 Views

ரயில் பயணிகளிடம் 500க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தம்பதியரை, ஜபல்பூர் ரயில்வே காவல்படையினர் கைது செய்துள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இருந்து பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளை ஏமாற்றி அவர்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இத்திருட்டில் ஈடுபடுவது யார் என தெரியாமல் ரயில்வே காவல்துறையினர் திணறிவந்த நிலையில், இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

அதன்படி, ஜபல்பூரின், க்ரிபால் சவுக் பகுதியில் இருக்கும் வீட்டின் ஒன்றில் தங்கியிருந்த மனோஜ் குப்தா (வயது 35), அவரின் மனைவி பூஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது இத்தம்பதியினர் என்பது தெரியவந்தது. காவல்துறையினரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது குறித்த பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்துள்ளது.

பீஹார் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குப்தா - பூஜா தம்பதியர், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபடி ரயில்களில் திருட்டில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர். 

பீஹார் அல்லது ஜார்கண்ட் மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, முதலில் கணவரான மனோஜ் அதில் பயணி போல் ஏறிக்கொள்வார். பின்னர் சக பயணிகளில் பணம் இருப்பவரை கண்டறிந்து அவருடன் நட்பாக பேசத்தொடங்குவார். அந்த சமயத்தில் மற்றுமொரு பயணி போல் பூஜா இவர்கள் இருக்கும் பெட்டியில் ஏறிக்கொண்டு இவர்களிடம் பயணத்திற்கான டிக்கெட்டை எடுத்துத் தருமாறு வேண்டுகோள் வைப்பார்.

அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்க கவுண்டருக்கு செல்லும் போது இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பயணியின் உடைமைகளை எடுத்துக்கொண்டு தங்களது வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் கணவர் மனோஜும் அங்கு வந்து சேர்ந்துவிடுவார்.

இந்த முறையில் இத்தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, 500க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் மனோஜுக்கு சொந்த ஊரில் இரண்டாவதாக ஒரு மனைவியும் உள்ளார். அந்த மனைவிக்கு 5 குழந்தைகள் இருக்கும் தகவலும் தெரியவந்துள்ளது. திருட்டு சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை தனது இரண்டாவது மனைவியின் செலவுக்காக அனுப்பி வைத்துவிடுவாராம் மனோஜ்.

இத்தம்பதியர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பல ஆண்டுகளாக காவல்துறையினருக்கு ஏற்பட்டு வந்த அழுத்தம் நீங்கியுள்ளது. 

Categories: குற்றம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக பெற்ற தாய் மீது கொலைவெறித்

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

போச்சம்பள்ளி அருகே கிணறு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட

குமாரபாளையம் அருகே 2 கோடி ரூபாய் கள்ளநோட்டு அடிக்க திட்டமிட்டிருந்த

பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தனது ஃபேஸ்புக்கில்

தற்போதைய செய்திகள் Sep 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )